வணக்கம் 27/3/2023 அன்று நடந்த நிதியாண்டின் நிறைவு கூட்டத்தில் Digital Marketin…

வணக்கம்🙏

27/3/2023 அன்று நடந்த நிதியாண்டின் நிறைவு கூட்டத்தில் Digital Marketing குறித்து PowerPoint presentation கொடுத் HCL Technologies நிறுவனத்தின் Information Technology Manager நமது உறவினர் தம்பி திரு.V.முகேஷ்கண்ணன் அவர்கள் அந்த பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சுயமாக விளம்பர துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.

விளம்பரதுறையில் உள்ள உறவினர்களை அறிமுகப்படுத்த பொருளாளர் திரு.பாலாஜி அவர்களிடம் கேட்டுள்ளார். நம் ACCI குடும்பத்தில் விளம்பர துறையில் உள்ள A.R.PUBLICITY & INFO BUS திரு.ஆறுமுகம் அவர்களை தொடர்பு கொள்ள சொல்லி உள்ளார்.

திரு.ஆறுமுகம் அவர்கள் Union Club ல் நடைபெற்ற விளம்பரத்துறை சங்க கூட்டத்திற்கு திரு.முகேஷ் அவர்களை வரவழைத்து அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

விளம்பரத்துறையில் முகேஷ் மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்து விளக்கிப் பேசவும் ஏற்பாடு செய்து அவருக்கு ஒரு நல்ல தளத்தை உருவாக்கி தந்துள்ளார். மாப்பிள்ள ஆறுமுகம் அவர்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றி

திரு முகேஷ் அவர்கள் நம் ACCI குடும்பத்தில் அடுத்து இணைய உள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நமது சமுதாய இளம் பிள்ளைகள் ,புதிதாகவும் இல்லை முதல்தலைமுறை தொழில் முனைவோருக்கு என்றும் உறுதுணையாய் ACCI உறுப்பினர்கள் இருப்போம் என்ற உறுதிமொழியை மீண்டும் நிரூபித்திருக்கிறார் சித்தப்பா ஆறுமுகம் அவர்கள்.

 

We will be happy to hear your thoughts

Leave a reply

ACCI
Logo